நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'டிக்கிலோனா' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இதில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'ஜெய் பீம்' புகழ் தமிழ் , எம். எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, ஜான்விஜய், சேசு, ஜாக்குலின், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தீபக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் றோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை. இப்படத்தின் கதை நிகழும் காலகட்டம்1960இல் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சந்தானம் இதுவரை தோன்றாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.'' என்றார்.
சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கிக்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என பெயரிடப்பட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM