தமிழ் திரையுலகின் நடிகரும், வசனகர்த்தாவும், இயக்குநருமான ஈ. ராம்தாஸ் நேற்று (23) காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ராம்தாஸ். மறைந்த நடிகரும், இயக்குநருமான மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய பின் இயக்குநரான இவர், இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளியான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான இவர், மறைவதற்கு முன்பு வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மைக்காலமாக வயது மூப்பின் காரணமாக திரைப்படத்தை இயக்கும் பணியிலிருந்து ஒதுங்கி, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்னர் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஓய்வில் இருந்து வந்த அவருக்கு திடீரென்று இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
இதனை அவரது மகனான கலைச்செல்வன் முகநூல் பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சக நடிகர்களையும், சக கலைஞர்களையும் எப்போது சந்தித்தாலும் ஊக்கமளிக்கும் வகையில் பேசும் ராம்தாஸின் இழப்பு, தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவருக்கு திரையுலகினரும், ஏராளமான ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதள ஊடகங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM