நடிகர் கவின் நடிக்கும் 'டாடா' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

By Digital Desk 5

24 Jan, 2023 | 09:37 AM
image

நடிகரும், 'பிக் பொஸ்' பிரபலமுமான கவின் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டாடா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'டாடா'. இதில் கவின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' படப்புகழ் நடிகை அபர்ணாதாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், வி டி வி கணேஷ், பிரதீப் அண்டனி, ஹாரிஸ் கே. பவுசி உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இளைய தலைமுறையின் நவீன வாழ்வை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10-ம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கதையை மட்டும் நம்பி வெளியாகும் படைப்புகளில் 'டாடா' எனும் திரைப்படமும் ஒன்று என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' வாணி...

2023-02-04 16:05:03
news-image

குத்தாட்ட நடிகையான ரித்திகா சிங்

2023-02-04 13:31:25
news-image

தலைக்கூத்தல் - திரை விமர்சனம்

2023-02-03 17:33:34
news-image

இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் மறைவு

2023-02-03 16:37:15
news-image

நடிகர் மகத் ராகவேந்திரா நடிக்கும் 'காதல்...

2023-02-03 13:29:14
news-image

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்...

2023-02-03 13:29:59
news-image

சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின்...

2023-02-03 13:30:40
news-image

பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்...

2023-02-03 13:31:10
news-image

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

2023-02-02 12:46:37
news-image

மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகும் 'கிறிஸ்டி'...

2023-02-02 12:08:57
news-image

'தளபதி 67' படத்தின் தொடக்க விழா...

2023-02-02 11:48:28
news-image

சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் மூன்றாவது...

2023-02-02 11:48:09