மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரிப்பப்பரி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஆக்குப்பாக்கு..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாடல் வெளியிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் அருண் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ரிப்பப்பரி'. இதில் மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நோபல் கே. ஜேம்ஸ், மாரி, ஸ்ரீனி, காவியா அறிவுமணி, ஆரத்தி, தனம், செல்லா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு திவாகரா தியாகராஜன் இசையமைத்திருக்கிறார். சாதிய பாகுபாடுகளை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஏ கே தி டேல்ஸ்மேன் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்தில், படத்தின் இயக்குநர் அருண் கார்த்திக் எழுதி, பாடகி அக்ஷிதா மெர்லின் பாடிய 'ஆக்குப்பாக்கு எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலுக்கான காணொளி, அனிமேஷன் வடிவில் இடம்பெற்றிருப்பதாலும், புதிய விடயங்களை வண்ணங்களால் காட்சி படுத்தியிருப்பதாலும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM