உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 5

24 Jan, 2023 | 08:52 AM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது என முக்கிய தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆணைக்குழுவின் தலைவர் உட்பட நான்கு உறுப்பினர்களும் கலந்தாலோசித்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து வேறுப்பாடு உள்ளது என முக்கிய தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 09 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தின் 38(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் குறித்த வர்த்தமானியை வெளியிடுவார்கள்.

அத்துடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்,சுயாதீன குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விபரம் தொடர்பான அனைத்து விடயங்களும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்படும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் ஆணைக்குழுவுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று (24) இடம்பெறவுள்ளது.தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படும்.தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04
news-image

சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பான பிரேரணை 32...

2023-03-21 19:55:05