ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக இம்ரான் கான் கட்சியின் 45 எம்.பிகள் அறிவிப்பு

Published By: Sethu

23 Jan, 2023 | 05:05 PM
image

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் (பிரிஐ) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் தமது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக  இன்று அறிவித்தனர். 

இம்ரான் கானின் உத்தரவின் பேரில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்படி எம்.பிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், இம்ரான் கானின் பிரிஐ கட்சி எம்.பிகள் சிலரும் கூட்டணிக் கட்சி எம்.பிகள் சிலரும்  இம்ரான் கான் அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றதால் இம்ரான் கானின் அரசாங்கம் கவிழ்ந்தது. இதையடுத்து, பிரிஐ கட்சி எம்.பிகள் 123 பேர் கூட்டாக ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். 

எனினும்,  பாகிஸ்தானின் பாராளுமன்ற சபாநாயகர் ராஜா பர்வேஸ் அஷ்;ரப்,  கூட்டாக ராஜினாமா செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார்.

11 பேரின் ராஜினாமாவை மாத்திரம் ஏற்றுக்கொண்டார். ஏனையோரின் ராஜினாமாவை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் தனித்தனியாக அழைக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்;தார். கடந்த வாரம் மேலும் 69 பேரின் ராஜினாமாவை அவர் ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில் இம்ரான் கானின் உத்தரவின் பேரில், தமதுராஜினாமாவை வாபஸ் பெறுவதாக 45 எம்பிகள் இன்று (23) அறிவித்துள்ளனர்.

ராஜினாமாவை வாபஸ் பெறுபவர்களின் பட்டியல் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிஐ  கட்சித் தலைவர் அமீர் டோகர் கூறினார்.

சந்தர்ப்பவாத எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலாக உண்மையான எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் பிரிஐ எம்.பிகள் அறிவித்துள்ளனர்.

இன்று காலை நாடாளுமன்றத்துக்கும், சபாநாயகர் இல்லத்துக்தும் மேற்படி எம்.பிகள் செல்வதை அதிகாரிகள் தடுத்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வெளியே அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47