யுத்த காலத்திலும் கூட நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்றதை பொலிஸ்மா அதிபர் நினைவில் கொள்ள வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Vishnu

23 Jan, 2023 | 04:11 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் நோக்கத்தினை செயற்படுத்துவதற்காகவே தேர்தலின் போது பாதுகாப்பினை வழங்க முடியாது என்று பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார்.

அரசியலமைப்கு ரீதியாக அவரால் அவ்வாறு கூற முடியாது. யுத்த காலத்திலும் கூட நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்றன என்பதை பொலிஸ்மா அதிபர் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாடளாவிய ரீதியில் 339 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றோம். வடக்கில் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 336 தொகுதிகளில் நாம் போட்டியிடுகின்றோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிக கேள்வி காணப்படுகிறது. காரணம் எம்மால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் இதனை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது.

அரசியலமைப்பு ரீதியில் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான வழிமுறை அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை. எனவே நிதி தட்டுப்பாடு, பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் , எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட காரணிகளைக் குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தலின் போது பாதுகாப்பினை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு அரசியலமைப்பு ரீதியாக பொறுப்புக்கள் உரித்தாக்கப்பட்டுள்ளன. எனவே அரசாங்கத்தின் தேவைகளுக்காக பாதுகாப்பினை வழங்க முடியாது என்று அவரால் கூற முடியாது.

காரணம் நாட்டில் வடக்கிலும் , தெற்கிலும் யுத்தமும் மோதல்களும் இடம்பெற்ற காலத்தில் கூட தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தேர்தல் கடமைகளுக்காக பாதுகாப்பை வழங்க வேண்டியது பொலிஸ்மா அதிபரின் தவிர்க்க முடியாத கடமையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00