நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கிக்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் தமிழ் திரைப்படம் 'கிக்'.
இதில் சந்தானதுக்கு ஜோடியாக நடிகை தான்யா ஹோப் நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜக்கண்ணா, செந்தில், ஷகிலா, வையாபுரி, கிரேன் மனோகர், மனோபாலா, ராகினி திரிவேதி, பிரம்மானந்தம், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்
சுதாகர் எஸ்.ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு அர்ஜுன் ஜென்யா இசையமைத்திருக்கிறார்.
பொழுதுபோக்கு அம்சங்களை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்த படத்தை ஃபோர்ச்சூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன் ராஜ் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னோட்டத்தில் நடிகர் சந்தானத்தின் வழக்கமான ஒன் லைன் பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM