தனுஷ் நடிப்பில் தயாராகிவரும் 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்காக தொழில்நுட்ப கலைஞர்கள் அரங்கம் அமைக்கும் பணி தொடர்பான பிரத்தியேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
'ராக்கி', 'சாணிக்காயிதம்' படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் கன்னட திரையுலகின் சுப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
எக்ஷன், என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கேரக்டர் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்புக்காக இப்படக்குழுவினர் தயாராகி வரும் பிரத்தியேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தக் காணொளி வெளியிடப்பட்டதன் பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், நடிகர் தனுஷின் ரசிகர்கள் இதனை 'கேப்டன் மில்லர்' படத்தின் அப்டேட் தகவல் என்றளவில் ஏற்றுக்கொண்டு இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதனிடையே கேப்டன் மில்லர் படத்தின் கதை நிகழும் காலகட்டம், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு முன்னதான காலகட்டம் என்பதால், அதனை காட்சியின் நம்பகத்தன்மைக்காக திறந்த வெளியில் பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து, வாகனங்கள் உட்பட பல விடயங்கள் அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரத்தியேகமாக தயாராகும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM