(எம்.ஆர்.எம்.வசீம்)
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாரத்துக்குள் எனக்கு கிடைத்த பின்னர் அதில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கின்றேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வேட்பாளர்களின் தேர்தல் செலவை கட்டுப்படுத்துவதற்காக விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் திருத்தங்களை உள்ளடக்கி முறையாக தயாரிப்பதற்காக சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைபுகள் திணைக்களத்துக்கு தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் இந்த வாரத்துக்குள் எனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். சட்டமூலம் கிடைத்ததுடன் அதில் கைச்சாத்திட்டு உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டபோதும் சட்டமூலத்தில் தனது கையொப்பம் இடப்பட்ட பின்னரே அது சட்டமாக அமுலாகும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM