ஹைட்ரோகெபாலஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

By Ponmalar

23 Jan, 2023 | 01:43 PM
image

எமது மூளை பகுதியில் அமையப்பெற்றிருக்கும் வென்ட்ரிக்கிள்ஸ் எனும் பகுதியில் இயல்பான அளவை விட கூடுதலாக அளவில் பிரத்யேக திரவங்கள் இருந்தால், இதனால் மூளைப் பகுதிக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஹைட்ரோகெபாலஸ் எனும் பாதிப்பு உண்டாகிறது. இதற்கு தற்போது சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிக்க இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கும், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் திடீரென்று ஹைட்ரோகெபாலஸ் எனும் பாதிப்பு ஏற்படுகிறது.

எம்முடைய உடலில் முதுகுத்தண்டுவட பகுதியில் செரிப்ரோ ஸ்பைனல் திரவம் சுரந்து, அவை வென்ட்ரிக்கள்ஸ் எனப்படும் பிரத்யேக குழாய் வழியாக மூளை மற்றும் முதுகெலும்பு முழுவதும் பாய்கிறது.

இந்த திரவம் இயல்பான அளவை விட கூடுதலாக சுரந்தாலோ அல்லது வென்ட்ரிக்கள்ஸ் வழியாக சென்றாலோ மூளை பகுதியில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. அத்துடன் அப்பகுதியிலுள்ள திசுக்களை சேதப்படுத்தி, மூளையின் செயல்பாட்டில் தடைகளையும், இடையூறுகளையும், கோளாறுகளையும், சிக்கல்களையும் உண்டாக்குகிறது.

குழந்தைகளாக இருந்தால் வழமையான அளவைவிட அவர்களின் தலையின் அளவு அதிகமாக இருக்கும். சிலருக்கு அவர்கள் வளரும் போது தலையின் அளவு மட்டும் விரைவாக வளரும். மேலும் உச்சந்தலைப்பகுதியில் வீக்கம் அல்லது மென்மையான பகுதியோ ஏற்படும்.

இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், அந்த குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து முறையான ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். அதே தருணத்தில் வயதானவர்களுக்கு குமட்டல், வாந்தி, சோம்பல், எரிச்சல், வலிப்பு, கண்ணிமைகளின் செயல்பாட்டில் சமசீரற்ற தன்மை, தசை வலி ஆகியவை இருந்தால் அவை ஹைட்ரோகெபாலசின் அறிகுறியாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தை உண்டாக்கி, அதனை மருத்துவரிடம் காண்பித்து அவர்கள் மேற்கொள்ள வலியுறுத்தும் பரிசோதனைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேறு சிலருக்கு தலைவலி, பார்வையில் தடுமாற்றம், கண் அசைவுகளில் இயல்பற்ற தன்மை, அதீத தூக்கம், அதீத சோர்வு, குமட்டல், வாந்தி, பசியின்மை, இயல்பான அளவைவிட கூடுதலாக சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஹைட்ரோகெபாலஸ் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் போது மருத்துவர்கள் நோயாளிக்கு அல்ட்ரா சவுண்ட், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர். பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திய பிறகு ஷண்ட் சத்திர சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபிக் தேர்ட் வென்ட்ரிகுளோஸ்டோமி ஆகிய சத்திர சிகிச்சைகளின் மூலம் மூளையின் பகுதியில் அதிகமாக தேங்கியிருக்கும் திரவத்தை அகற்றி, மூளையின் அழுத்தத்தை சீராக்கி, முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

டொக்டர் விக்னேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹைபர்டிராபிக் அப்ஸ்ட்ரக்டிவ் கார்டியோமயோபதி எனும் திடீர்...

2023-02-08 12:27:00
news-image

தொண்டையில் கிச்...கிச்.... தொந்தரவா.....?

2023-02-08 12:18:50
news-image

அம்ப்ளிக்கல் கிரானுலோமா எனப்படும் தொப்புள் கட்டி...

2023-02-07 15:36:13
news-image

குடல் எரிச்சல் பாதிப்பை ஃபுட்மாப் (FODMAP)...

2023-02-06 13:47:17
news-image

அயோட்டிக் டிஸெக்ஷன் எனப்படும் இதய தமனி...

2023-02-04 13:31:54
news-image

மூளை கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2023-02-02 16:56:07
news-image

பிரபலமடைந்து வரும் யெயர்த்திங் தெரபி

2023-02-01 17:35:35
news-image

குழந்தைகளுக்கு குறட்டை வருவது ஏன்?

2023-02-01 11:51:33
news-image

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின்...

2023-02-01 11:09:27
news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54