விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்த நகைச்சுவை நடிகர்

By Digital Desk 5

23 Jan, 2023 | 02:32 PM
image

'லத்தி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகி வரும் 'மார்க் ஆண்டனி' எனும் திரைப்படத்தில் தெலுங்கின் முன்னணி நகைச்சுவை நடிகரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான சுனில் இணைந்திருக்கிறார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இதில் விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார்.

இவர்களுடன் எஸ். ஜே. சூர்யா, நிழல்கள் ரவி, வை. ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுடன் தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகரான சுனில் இணைந்திருக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மினி ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினோத் தயாரித்து வருகிறார்.

பான் இந்திய திரைப்படங்களில் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திர நடிகர்களையும் நடிக்க ஒப்பந்தம் செய்து, படத்தை தயாரிப்பது என்பது தற்போது  பெசனாகிவிட்டது.

அந்த வகையில் விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் சுனில் இணைந்திருக்கிறார் என திரையுலக வணிகர்கள் ஆர்வமுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே 'புஷ்பா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் சுனில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' வாணி...

2023-02-04 16:05:03
news-image

குத்தாட்ட நடிகையான ரித்திகா சிங்

2023-02-04 13:31:25
news-image

தலைக்கூத்தல் - திரை விமர்சனம்

2023-02-03 17:33:34
news-image

இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் மறைவு

2023-02-03 16:37:15
news-image

நடிகர் மகத் ராகவேந்திரா நடிக்கும் 'காதல்...

2023-02-03 13:29:14
news-image

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்...

2023-02-03 13:29:59
news-image

சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின்...

2023-02-03 13:30:40
news-image

பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்...

2023-02-03 13:31:10
news-image

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

2023-02-02 12:46:37
news-image

மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகும் 'கிறிஸ்டி'...

2023-02-02 12:08:57
news-image

'தளபதி 67' படத்தின் தொடக்க விழா...

2023-02-02 11:48:28
news-image

சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் மூன்றாவது...

2023-02-02 11:48:09