ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது மனைவி மற்றும் அமைச்சர்களான பழனி திகாம்பரம், டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் நேற்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றனர். 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றவர்களுக்கு நேற்று திருப்பதி தேவஸ்தான சார்பாக விசேட வரவேற்புகள் செய்யப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7.30 மணிக்கு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு வணக்கத்திற்கு பின்னர் திருப்பதி தேவஸ்தானத்திலேயே தங்கிய பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 5.30 மணியளவிலும் வாழிகாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.