வங்கதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவர் மனைவி ஜாஸ்மின் ஜஹான் ஆகியோர் தமது வீட்டில் வேலை செய்த மஹ்ஃபூஸா அக்தர் (11) என்ற சிறுமியை சித்ரவதை செய்ததாக அவர்களுக்கு எதிராக முறைப்படி குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றம் உறுதிசெய்யப்படுமானால், இருவருக்கும் 7 முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அச்சிறுமி கடந்த செப்டம்பரில், உடலில் பல காயங்களுடனும் கால் உடைந்த நிலையிலும் வீதியில் கைவிடப்பட்டிருந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் சிறையிலிருந்து இம்மாதத்தின் முற்பகுதியில் பிணையில் வெளியில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மீதான குற்றப்பத்திரிகை வரும் ஜனவரி 12ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.