சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ' ஜெயிலர்' வெளியீடு குறித்து உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ' ஜெயிலர்'. இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவர்களுடன் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதியன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு வார இடைவெளியில் தமிழில் மிகப் பெரிய பட்ஜட் திரைப்படம் வெளியாகவிருப்பதால் ரஜினி ரசிகர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், 'ஜெயிலர் ' படத்தின் வெளியீடு தளாளிவைக்கப்படக்கூடும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
மேலும் இப்படத்தின் வெளியீடு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதியன்று வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM