'அறிவுச்சுடர்' போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும்

By Nanthini

23 Jan, 2023 | 01:40 PM
image

.ஆர். மன்சூர் பவுண்டேஷனின் அனுசரணையில் அறம் வலையமைப்பு நடத்திய 'அறிவுச்சுடர்' போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும் கடந்த சனிக்கிழமை (21) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது அந்நிறுவனத்தினதும் அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலினதும் தலைவியான சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுடீனின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட எட்டு தேசிய பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 'அறிவுச்சுடர்' போட்டித் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்த முதல் மூன்று பாடசாலைகளின் மாணவக்குழுக்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள், பணப்பரிசில்கள், சான்றிதழ்களும், சுற்றுத்தொடரில் பங்குகொண்ட பாடசாலைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதன்படி, இப்போட்டியில் முதல் இடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியும் (தேசிய பாடசாலை), இரண்டாம் இடத்தை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியும் (தேசிய பாடசாலை), மூன்றாம் இடத்தை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையும் (தேசிய பாடசாலை) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்துக்கு ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனினால் நகல் எடுக்கும் இயந்திரமொன்றும் வழங்கப்பட்டது. 

இந்த போட்டி நிகழ்ச்சிக்கு அறம் வலையமைப்பின் ஸ்தாபகர் டொக்டர் சிஹாபுடீன் நளிமுடீன், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை கல்வி வலய பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுல்லா, பிரதிக் கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் சபீனா இம்தியாஸ், கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு, அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யு.எல்.நசார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை கருவேற்காடுபதி ஶ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான...

2023-02-08 16:50:46
news-image

மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி...

2023-02-08 12:05:57
news-image

விஷ்வ கலா அபிமாணி 2023 விருது

2023-02-08 12:06:14
news-image

ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

2023-02-08 12:07:11
news-image

கராத்தே கலை - அங்கீகாரத்திற்கான வழிமுறை...

2023-02-08 12:07:50
news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58