3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தொல்பொருட்களுடன் மூவர் கைது!

Published By: Digital Desk 5

23 Jan, 2023 | 12:32 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

களுத்தறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  பகுதியில் புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் வாகன தரிப்பிடத்திற்கு அருகில்  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த பொருட்களின் பெறுமதி 03 கோடி எனவும் அதனைஅவர்கள்   விற்பனை செய்ய தயாராக இருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேக நபர் உடல்நலக் காரணங்களால் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மொரகஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார். 

மற்றைய இருவரும் 36 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் அவர்கள்கந்தர மற்றும் களுவாமோதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31