அம்பாறை - பொத்துவில் கடற்பகுதியில் மீனவப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை (22) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கலேவல - மன்கொலகொல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.