பசி எப்படி இலங்கையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றது

By Rajeeban

23 Jan, 2023 | 10:23 AM
image

திமுத் அத்தநாயக்க

www.dw.com

இலங்கையில் சமீபத்தில் கட்டுநாயக்காவில் வசிக்கும் ஆடைதொழிற்சாலையில் பணியாற்றும் நதீகா பிரியதர்சினி தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் ஒரு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டார்- உணவே அது

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அவரது குடும்பம்

சோற்றுடன் காய்கறியை முழு நாள் முழுவதும் நம்பியிருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சில நாட்கள் சமைப்பதற்கு எதுவும் இருப்பதில்லை.உணவை வாங்குவதற்கு பணமும் இருக்காது,இதன் காரணமாக பிரியதர்சினி தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.

இந்த நெருக்கடிபை பிரியதர்சினி மாத்திரம் எதிர்கொள்ளவில்லை,

இலங்கை முன்னொருபோதும் எதிர்கொண்டிராத இந்த பொருளாதார நெருக்கடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,வாழ்வாதாரத்தை அழித்துள்ளது வர்த்தகங்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன, பல குடும்ப ங்கள் உணவு எரிபொருள்  மருந்து போன்ற அத்தியாவசிய  பொருட்களை கொள்வனவு செய்வதில் நெருக்கடியை  எதிர்கொண்டன.

குறைவடைந்துகொண்டு சென்ற அந்நிய செலாவணி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளை  விலைகூடியதாகவும் அரிதானதாகவும் மாற்றியது.

2021 இல் இலங்கை அரசாங்கம் வேகமாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என எடுத்த முடிவினால் இலங்கை கடந்த வருடம் 40 முதல் 50வீத அறுவடையை இழந்தது.

செப்டம்பர் மாதமளவில் இலங்கையின் உணவுபணவீக்கம்  94.9 வீதமாக காணப்பட்டது,69.8 ஆக காணப்பட்ட பணவீக்கம் டிசம்பரில் 64- பின்னர்டீ 57 ஆக குறைவடைந்தது.

உணவுப்பொருட்களை பெறுவது கடினமானதாக மாறியதும் குறைந்த வருமானம் பெறும் பிரியதர்சினியை போன்றவர்களின் குடும்பங்கள் மேலும் அதிகளவு சுமையை எதிர்கொண்டன,இந்த சுமையை பிள்ளைகள் மீது சுமத்தவேண்டிய நிலையேற்பட்டது.

இலங்கையின் டிசம்பர் நிலை குறித்து உலக உணவுதிட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 36 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பு அற்று உள்ளன என தெரிவித்துள்ளது.

அதேவேளை ஜூனில் யுனிசெவ் 65.000 சிறுவர்கள் மோசமான மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தது.

இதன் காரணமாக வெறும் வயிற்றுடன் பாடசாலை செல்ல விரும்பாததால் பல பிள்ளைகள் பாடசாலை செல்வதை தவிர்க்கின்றனர்.

உணவுஇடைவேளையின் போது மற்ற பிள்ளைகள் உணவு உண்ணும்போது எனது பிள்ளையை வெறும் வயிற்றுடன் பாடசாலைக்கு அனுப்ப முடியாது என்கின்றார் பிரியதர்சினி- அவர் ஒருவரே அந்த குடு;ம்பத்திற்காக உழைக்கின்றார்.

சிலவேளைகளில் அவரது 13 வயது மகன் பாடசாலைக்கு உணவின்றி செல்கின்றார் தன்னால் பட்டினி கிடக்க முடியும் என தெரிவிக்கின்றார்.கற்றலை இழக்க விரும்பாததால் பாடங்களை தவறவிட விரும்பாததால் அவர் அவ்வாறு தெரிவிக்கின்றார்.

ஆனால் தனது ஆறுவயது மகளால் பட்டினி கிடைக்க முடியாது என பிரியதர்சினி தெரிவிக்கின்றார்.

உணவுபாதுகாப்பு எப்படி மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை பாதிக்கின்றது என்பதை அறிவதற்கான சரியான புள்ளிவிபரங்கள் இல்லை

எனினும் ஜூன் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கை மதிய உணவுகள் வழங்கப்படாத பாடசாலைகளில் மாணவர்கள் வருகை பாதிக்கப்படுகின்றது என தெரிவித்தது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஆரம்பமான பின்னர் சில இடங்களில் பாடசாலைக்கான மாணவர் வருகை 75 முதல்; 80 வீதத்தினால் குறைவடைந்து விட்டது என சில ஆதாரங்கள் தெரிவிப்பதாக  யுனிசெவ் பேச்சாளர் தெரிவித்தார் முன்னைய ஆண்டில் வரவு 80 வீதமாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உணவு கிடைப்பதற்கும் பாடசாலைக்கு மாணவர்கள் வருகைக்கும் இடையிலான தொடர்பு குறித்து கல்வி நிபுணர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

உணவு குறித்த உத்தரவாதம்; காணப்பட்டால் மாத்திரமே பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வார்கள் என்ற போக்கு காணப்படுகின்றது இதனை காணக்கூடியதாக உள்ளது என தெரிவிக்கின்றார் கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் தாரா டிமெல் இது கிராமங்களிலும் வசதிகள் அற்ற பாடசாலைகளிலும் காணக்கூடிய விடயம் என்கின்றார் அவர்.

தற்போது இலங்கையி;ல் முன்னெடுக்கப்படும்  பாடசாலைகளில் உணவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் காணப்படுகின்றார்.

பாடசாலைகள் ஐந்துநாட்களும் உணவு வழங்குவது குறித்து பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

உணவை வழங்க முடியாமை அதிகரித்த போக்குவரத்து கட்டணங்கள் கற்றலுக்கான பொருட்களின் விலை அதிகரிப்பு உட்பட பொருளாதாரத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் மாணவர்கள் வீட்டில் இருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றன என இலங்கையின் அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் இந்த நிலை காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் மாணவர்கள் மத்தியில் காணப்படும் மந்தபோசாக்கு பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுப்பது போல தோன்றவில்லை என்கின்றார்இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்

அரசாங்கத்தின் தற்போதைய ஊட்டச்சத்து திட்டம் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்களையே இலக்காக கொண்டது ஆனால் 4.3மில்லியன் மாணவர்கள் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது குறித்து கருத்து கேட்டவேளை இலங்கையின் கல்வியமைச்சு பதில் அளிக்கவில்லை.

கெரவலப்பிட்டியில் வசிக்கும் குமுதினி நிலுசா சஞ்ஜீவினியின் 8 வயது மகன் எதிர்நோக்கும் பிரச்சினை வேறு விதமானது-தனது நண்பர் மேலதிகமாக உணவு கொண்டுவரும் நாளில் மாத்திரமே அவரால் பாடசாலை செல்ல முடியும்.

மகனின் நண்பன் பாடசாலைக்கு வராத நாட்களில் என்னால் மகனை பாடசாலைக்கு அனுப்ப முடியாது ஏனென்றால் மகனிற்கு உணவு கிடைக்காது என்கின்றார் சஞ்ஜீவினி.

கற்றலுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமை ,பாடசாலை சப்பாத்துக்களை வாங்க முடியாமை போன்ற விடயங்களும் மாணவர்கள் பாடசாலை செல்வதை தடுக்ககூடும்

எனது மகனின் சப்பாத்து பிய்ந்துவிட்டது என்கின்றார் சஞ்சீவினி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடியால் சவால்களுக்குட்படுத்தப்படும் மலையக மாணவர்களின்...

2023-02-07 15:27:56
news-image

இலங்கையை முன்னிலைப்படுத்தி முரண்படும் சீனா –...

2023-02-07 12:18:17
news-image

துருக்கி பூகம்பம்- அலறல்கள்- அந்த நிமிடங்கள்...

2023-02-07 07:37:30
news-image

தீர்வு குறித்த ரணிலின் நகர்வை உன்னிப்பாக...

2023-02-06 15:49:00
news-image

எங்கள் குடும்பத்தின் இதயத்தையும் ஆன்மாவையும் இழந்துவிட்டோம்...

2023-02-06 15:23:56
news-image

பாடம் கற்குமா தமிழ்க் கட்சிகள்?

2023-02-03 13:35:17
news-image

அதிகரிக்கும் அழுத்தங்கள்

2023-02-03 13:06:01
news-image

ஏமாற்றும் பொறுப்புக்கூறல்

2023-02-03 12:56:39
news-image

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர

2023-02-03 12:48:50
news-image

பிரதமர் ஜெசிந்தாவின் இராஜினாமா ஜனநாயக மாண்பின்...

2023-02-03 12:45:34
news-image

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின்...

2023-02-03 12:34:21
news-image

சுதந்திரம்

2023-02-03 12:16:56