மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் தமிழ் தேசிய பொங்கல் விழா கிரானில் நடைபெற்றது.
வட்டாரக்கிளை தலைவர் எஸ்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா, மாநகர முதல்வர் தி.சரவணபவன், வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் என பல முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ மு.சண்முகம் ஆசியுரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து 1977ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தமிழரசு கட்சிக்கு தொண்டாற்றிய கூட்டணியால் 'அப்பா' என்று அழைக்கப்பட்ட கிரானைச் சேர்ந்த அமரர் பாக்கியராசாவுக்கு நினைவுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்து, 'பூத்தது தமிழ் புத்தாண்டு; புதுமைகள் பொலிகமாதோ' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
இக்கவியரங்கத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமை வகித்தார். கதிரவன் பட்டிமன்ற குழுவினரால் பட்டிமன்றம் நடைபெற்றது. பின்னர், பட்டிமன்ற குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில் தமிழரசுக் கட்சியில் அங்கத்துவப் படிவம் வழங்கப்பட்டு புதிய அங்கத்துவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இந்நிகழ்வானது எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் வாழைச்சேனை பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை கௌரவித்து, மக்கள் முன் அறிமுகப்படுத்தும் பிரச்சார கூட்டமாகவும் அமைந்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM