பல வருடங்களாக அமைதியாக இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலையானது தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்தப் பகுதியிலுள்ள கேம்பி பிளக்கெரி எனும் எரிமலையானது தற்போது வெடிப்பதற்கு தயாராகி ஆபத்தான நிலையை அடைந்துள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை ஆய்வியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு எரிமலையின் மக்மா தீக்குழம்பு திரவ வெளியீட்டு நிலையை கண்டுப்பிடித்துள்ள சம்பவம் இதுவாகும். 

இவ் எரிமலை வெடிக்குமாயின் சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்படையும் நிலை உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் எரிமலையானது நப்லி நகரத்தை அண்மித்தப்பகுதியில் உள்ளதோடு மறுமுனையில் விசுவியஸ் எரிமலையையும் காணப்படுவதால்  புவியியல் ரீதியில் பெரும் பேரழிவிற்கு சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 39000 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த கேம்பி பிளக்கெரி எரிமலை வெடித்த போது 100 கிலோ மீற்றர் தூரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததோடு ஐரோப்பாவில்  200000 வருடங்களில் நடந்த மிகப்பெரும் எரிமலை வெடிப்பு இதுவெனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் கேம்பி பிளக்கெரி எரிமலை 2005 ஆம் ஆண்டு வரையிலும் உறங்கும் நிலையில் காணப்பட்டுள்ளதோ  2012 ஆம் ஆண்டு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பாரிய

வெடிப்பிற்கு தயாராகி உள்ளதாக  இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.