அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - 10 பேர் பலி

Published By: Rajeeban

22 Jan, 2023 | 10:29 PM
image

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கலிபோர்னிய நகரமான மொனெட்டரி பார்க்கில் நடன நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துபேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லூனார் புதுவருட கொண்டாட்டங்களிற்காக இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் தப்பியோடிய நபரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசரசேவை பிரிவினர் அந்த பகுதிக்கு சென்றவேளை உள்ளேயிருந்து மக்கள் அலறியவண்ணம் வெளியில் ஓடி வந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோக்திற்கான காரணம் தெரியவில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு ஆசிய பிரஜைகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

நகரில் பெருமளவு பொலிஸ் பிரசன்னம் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட பகுதியில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் காணப்படுகின்றார் கதவுகளை மூடுங்கள் என மூவர் தெரிவித்தனர் என நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 நடனநிகழ்வுஇடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்குள் துப்பாக்கிதாரி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47