பீபாவினால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இடைக்காலத் தடைதடை

22 Jan, 2023 | 10:06 PM
image

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு (FFSL) 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியிலிருந்து FIFA (சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கம்)  இடைக்காலத் தடை தடை விதித்துள்ளது. சகல உறுப்பு சங்கங்களுக்கும் பீபாவினால் 22ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றிக்கையில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

FIFA செயலாளர் நாயகம் ஃபட்மா சமூராவினால் கையொப்பமிடப்பட்டு உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில்,

'FIFA பேரவையின் பணியகம் 2023 ஜனவரி 21ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு அமைய FIFA சட்ட விதிகளின் 16ஆவது பிரிவின் பிரகாரம் மறு அறிவித்தல்வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு  இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இத்தால் உங்களுக்கு அறியத்தருகிறோம்.

'இதன் காரணமாக FIFA சட்டவிதிகளின்  13ஆம் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளதற்கு அமைய 2023 ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அதன் சகல உறுப்பினர் உரிமைகளையும் இழக்கிறது. எனவே தடை நீக்கப்படும்வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதித்துவம் மற்றும் கழக அணிகள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற முடியாது. FIFA அல்லது AFCயினால் ஏற்பாடு செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்கள், பாடநெறிகள், அல்லது பயிற்சிகளின் அனுகூலங்களை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அல்லது அதன் உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் அனுபவிக்க முடியாது. அத்துடன் FIFAவின் தடை இருக்கும்வரை FFSLஉடன் அல்லது அதன் அணிளுடன் நீங்களும் உங்களது துணை நிறுவனங்களும் எந்தவித விளையாட்டுத்துறை தொடர்பிலும் ஈடுபடவேண்டாம்  என்பதை  உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிக் கட்டத்தில் இலங்கை ஏ ஆதிக்கம்...

2023-02-03 19:50:53
news-image

சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்டத்திற்கு டயலொக் உந்துசக்தி

2023-02-03 16:47:50
news-image

ஐ.சி.சி. சுப்பர் ஸ்டார்கள் குழுவில் இலங்கையின்...

2023-02-03 14:45:06
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை...

2023-02-03 13:32:56
news-image

மதுஷான் ஆட்டமிழக்காமல் அபார இரட்டைச் சதம்...

2023-02-03 10:41:11
news-image

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுசந்திகா மகளிர்...

2023-02-03 09:44:25
news-image

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல்...

2023-02-02 10:31:01
news-image

55 வயதில் போர்த்துகல் கழகத்தில் விளையாட...

2023-02-02 10:04:53
news-image

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்...

2023-02-02 09:44:41
news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17