(இராஜதுரை ஹஷான்)
2022ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பலவீனமான அரச தலைவருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான மக்கள் போராட்டம் கடந்த 2022.04.09 அன்று ஆரம்பமானது.
மக்கள் போராட்டம் நிறைவடையவில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள் போராட்டம் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பேருவளை தொகுதி அமைப்பாளர் தொகுதியில் நேற்று (21) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாட்டில் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் 9ஆம் திகதியில் இடம்பெற்றன. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வரலாற்று சம்பவங்களை மீட்டிப் பார்த்து தேர்தல் திகதியை நிர்ணயித்துள்ளார்கள்.
ஊழல் மற்றும் பலவீனமான அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் 2022.04.09ஆம் திகதி ஆரம்பமானது. மக்களின் அபிலாசைகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிர்ணயித்துள்ளது.
ராஜபக்ஷர்களின் பலவீனமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தன்னிச்சையான போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சிறந்த அரச தலைவர்களையும் அரசாங்கத்தையும் தெரிவுசெய்ய வேண்டுமாயின், முதலில் நாட்டு மக்கள் பாரம்பரிய சிந்தனைகளில் இருந்து மாற்றமடைய வேண்டும் என்பதை மக்கள் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தினார்கள்.
மக்கள் மாற்றத்தை இன்றும் அரச தலைவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து தாம் வெற்றி பெற்றதாக அரச தலைவர்கள் எண்ணுகிறார்கள். அரச தலைவர்கள் தோல்வி என்பது இந்த ஆண்டு ஜனநாயக ரீதியில் உறுதிப்படுத்தப்படும்.
பலவீனமான அரச தலைவரை 2022ஆம் ஆண்டு வெளியேற்ற முடியுமாயின், 2023ஆம் ஆண்டு சிறந்த தலைவரை தெரிவுசெய்ய முடியும்.
பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்தவர்களினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.
பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாத்து, பொருளாதார மீட்சிக்காக நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறார். இந்நிலை முதலில் மாற்றமடைய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM