சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐ.சி.சி.டெஸ்ட் அணியின் தலைவரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி. தெரிவுசெய்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி இதோ...

1. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா)

2. அலஸ்ரியா குக் (இங்கிலாந்து) (அணித் தலைவர்)

3. கேன் வில்லியம்சன் (நியுஸிலாந்து

4. ஜோ ரூட் (இங்கிலாந்து)

5. எடம் வோட்ஜஸ் (அவுஸ்திரேலியா)

6. ஜோனி பெயர்ஸ்டோவ் (இங்கிலாந்து)

7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)

9. ரங்கன ஹேரத் (இலங்கை)

10.மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)

11. டேல் ஸ்டெயின் (தென்னாபிரிக்கா)

12. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)