சீஸ் பிஸ்கட்

By Devika

22 Jan, 2023 | 12:13 PM
image

தேவையான பொருட்கள்

மைதா மா - 2 கப்

பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி

தயிர் - ½ கப்

துருவிய சேடார் சீஸ் - 1 கப்

பால் - ½ கப்

பட்டர் - கால் கப்

நறுக்கிய வெங்காயத்தாள் - 4

உப்புத்தூள் - கால் தேக்கரண்டி

மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை

மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், பேக்கிங் பவுடர், சோடா ஆகிய­வற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதனுடன் சீஸ்ஸையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், பால், பட்டர் மற்றும் பொடியாக நறுக்­கிய வெங்காயத்தாளையும் சேர்த்து நன்கு பிசைந்து மாவுக் கலவையில் போட்டு பிசையவும். அழுத்தி பிசைய வேண்டாம். எல்லாம் ஒன்றோடு ஒன்று சேரும்வரை பிசைந்தால் போதும். பிறகு அவனை 400 டிகிரிக்­குள் வைக்கவும். தயாரித்த கலவையை பேக்கிங் செய்யும் தட்டில் பன்னிரெண்டு பாகங்­களாக பிரித்து வைத்து பேக் செய்ய­­வும்.

பத்து முதல் பதி­னைந்து நிமி­டங்­கள் வரை வேக­வைத்து பிஸ்கட் இளஞ்­சிவப்பாக ஆனவுடன் வெளி­யில் எடுத்து ஆற விடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right