மீண்டும் இணையும் இயக்குநர் ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி

Published By: Nanthini

21 Jan, 2023 | 04:03 PM
image

'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் பெயரிடப்படாத புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்காக கடுமையாக உழைத்து வரும் முன்னணி நடிகர்களில் விஷ்ணு விஷாலும் ஒருவர். 

இவரது தயாரிப்பில் வெளியான 'எஃப்.ஐ.ஆர்', மற்றும் 'கட்டா குஸ்தி' ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து, தற்போது அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி வரும் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். 

இந்தத் படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் ராம்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் - இயக்குநர் ராம்குமார் - நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி இணைந்திருப்பதால், இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தற்போதைய நிலையிலேயே ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right