ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம்  2674 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தின் போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் மஹிந்த  சமரசிங்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதார துறையினர் மேற்கண்டவாறு பதிலளித்தனர். 

களுத்துறை மாவட்டத்தில் சுகாதார அத்தியட்சர் பிரிவில் 2330 டெங்கு நோயாளர்களும் தேசிய சுகாதார விஞ்ஞான பணிமனை நிர்வாகப் பிரிவில் 344 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக அத்தியட்சர் தெரிவித்தார்.