பெரு நாட்டில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் ; வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் தீக்கிரை

Published By: Digital Desk 3

21 Jan, 2023 | 02:06 PM
image

பெரு நாட்டின் ஜனாதிபதி  டினா போலுவார்டேவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், லிமாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் ஒன்று வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். மேலும் பிளாசா சான் மார்டினில் உள்ள கட்டிடம் தீயின் போது எரிந்து நாசமாகியதாக கருதப்படுகிறது.

பெருவின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ ஜனாதிபதி பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யுமாறும் டினா பொலுவார்டே பதவி விலகுமாறும் வலியுறுத்தி காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இதனால் பெரு நாட்டில் பல இடங்கள் போராட்டக் களமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தலைநகர் லிமாவில், போராட்டக்காரர்கள் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தினர்.

அப்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கலைத்தனர். 

நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால் பெரு நாட்டில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல...

2026-02-14 13:04:46
news-image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து...

2026-02-14 12:26:49
news-image

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் !...

2026-02-14 12:20:32
news-image

கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது...

2026-02-14 11:05:44
news-image

கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு...

2026-02-14 10:22:35
news-image

மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி :...

2026-02-14 09:57:52
news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56