மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதில் நெருக்கடி

Published By: Digital Desk 5

21 Jan, 2023 | 11:58 AM
image

(எம்.மனோசித்ரா)

மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான 55 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலையீட்டுடன் இதுவரையில் 20 பில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு , எஞ்சிய 35 பில்லியனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்மாத இறுதிக்குள் இந்த பணத்தொகையை திரட்டி நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் பாரிய மின் விநியோக நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதல் வாரம் நிறைவடைவதற்கு முன்னர் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால் 6 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியான மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும் என்றும் மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் வரை இந்நிலைமை நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி நிலைமை நிலவுவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் மழையுடனான காலநிலை ஆரம்பிப்பதற்கு முன்னர் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால் புத்தளத்தில் அவற்றை தரையிறக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்து, நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை நிதி அமைச்சு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக முடிவு பள்ளத்தாக்கில் கீழே தள்ளி...

2024-10-14 21:42:22
news-image

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு;...

2024-10-14 20:21:00
news-image

மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி...

2024-10-14 20:06:41
news-image

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை...

2024-10-14 19:44:07
news-image

ஆயுர்வேத வைத்தியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை...

2024-10-14 21:39:04
news-image

தமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர், நிர்வாக செயலாருக்கு...

2024-10-14 21:25:30
news-image

யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை...

2024-10-14 17:57:12
news-image

இரவு நேர களியாட்ட விடுதிகளில் சுற்றிவளைப்பு...

2024-10-14 17:44:44
news-image

தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று...

2024-10-14 17:43:47
news-image

துணைவிமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி...

2024-10-14 17:25:55
news-image

குருணாகலில் குளவி கொட்டுக்கு இலக்காகி 39...

2024-10-14 17:27:49
news-image

எதிர்க்கட்சியிலிருந்து பேசியது போல ஜனாதிபதி அநுர...

2024-10-14 17:27:28