19 வய­திற்­குட்­பட்­டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

பங்களதேஷ் அணிக்கெதிரான இந்த போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 48.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் ரயான் ரப்ஷான் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரம 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் சத்துரங்க 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கவுள்ளது.