( எம்.எப்.எம்.பஸீர்)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேரில் இருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான சிரப்புக் குழுவொன்று இது குறித்து விசாரணைகலை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பி.பத்திரண மற்றும் முன்னாள் அரச அதிகாரி எஸ்.பி. திவாரத்ன ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு மற்றும் கடவத்தை ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்ப்ட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து விலகுமாறும் இல்லையேல் குடும்பத்தாருடன் கொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தனக்கு நேற்று முன் தினம் (19)மாலை 3.00 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அநாமதேய தொலைபேசி அழைப்பு கிடைக்கப் பெற்றதாகவும் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பிபத்திரண அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தன்னை போராட்டக் குழுவின் அங்கத்தவர் என அடையாளபப்டுத்திக்கொண்டதாகவும் பத்திரண தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்திரணவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில், வட்ஸ் அப் மூலம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எஸ்.பி. திவாரத்னவுக்கும் அழைப்பெடுக்கப்ப்ட்டு அச்சுறுத்தல் விடுக்கப்ப்ட்டுள்ளது. அதே பானியில் அவரும் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்யப்ப்ட்டுள்ள முறைப்பாடு ஊடாக தெரியவந்துள்ளது.
அச்சுறுத்தல் விடுக்கப்ப்ட்டதன் பின்னர் அச்சுறுத்தியதாக நம்பப்படும் நபர் தனது வீட்டினை வீடியோ பதிவு செய்து, அதனை வட்ஸ் அப் செய்ததாகவும் திவாரத்ன முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இந் நிலையிலேயே இவ்விரு முறைப்படௌகள் குறித்தும் உடனடியாக குற்றப் புலனயவுத் திணைக்களம் அரிவியல் தடயங்களை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உறுப்பினர்களுக்கு ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்பும் வழ்னக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பிரகாரம், குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM