( எம்.எப்.எம்.பஸீர்)
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில் நாட்டுக்குள் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவது மிக முக்கியமானதாகும். அதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவது பொருத்தமற்றது.
அவ்வாறான நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்காக நிதி ஒதுக்கிக் கொள்வதில் சிரமம் காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டுமாயின் அதற்கு தேவையான மேலதிக நிதி தொகையை திரட்டிக் கொள்ளவது திறைசேரிக்கு பாரிய சவாலாக அமையும்.' என நிதி அமைச்சின் செயலாளர் கே.மஹிந்த சிறிவர்தன உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பில், அதனை விசாரிக்கும் நீதியர்சர்கள் குழாத்தினருக்கு நிதி அமைச்சின் செயலாளர் சிறிவர்தன சமர்ப்பித்துள்ள சத்தியக் கடதாசியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) கடந்த 3 ஆம் திகதி தாக்கல் செய்த நிலையில், அம்மனு எந்த சட்ட அடிப்படைகளையும் கொண்டதல்ல என்பதை சுட்டிக்காட்டி அதனை நிராகரிக்குமாறு கோரி 3 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளன.
இம்மனுக்களில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் உயர் நீதிமன்ருக்கு நேற்று முன் தினம் (19) சத்தியக் கடதாசி ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்ற அலுவலகத்துக்கு அவர் அந்த சத்தியக் கடதாசியை சமர்ப்பித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் கே.மஹிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்திய கடதாசியில் கொவிட் பெருந்தொற்று நிலைமையின் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நாட்டின் ஏற்றுமதி வருமானம் 8.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்தாக தெரிவித்துள்ளார்.
அதன் பிரதிபலனாக கடந்த 2021 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 11.6 சதவீதத்தால் உயர்வடைந்ததாக சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
'அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த மாதாந்தம் 90 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது, ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக மாதாந்தம் 28 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. மருந்துகள்,உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் 28 பில்லியன் ரூபா மாதாந்தம் செலவாகுகிறது.
இந்நிலையில் அரச வருமானம் மிக பாரதூரமாக வீழ்ச்சிடைந்துள்ள நிலையில் இந்த அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க வட்டி செலுத்துவதற்கு மாத்திரம் மாதாந்தம் 114 பில்லியன் ரூபாய் வரை செலவாவதுடன்,கடன் செலுத்துவதற்காக 169 பில்லியன் ரூபா கடந்த 2022 ஆம் ஆண்டு செலவழிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடன் தரப்படுத்தல் சுட்டெண் பிரகாரம் இலங்கை கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் நிதி,பெற்றுக்கொள்வதில் எமக்கு (இலங்கை) சிக்கல்கள் உருவாகியுள்ளன.
அதனால் நிதியை திரட்டல் நடவடிக்கைகளை வங்கியல்லா மூலங்கள் ஊடாக அதிக வட்டி வீதத்தில் கீழ் பெற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அதனால் தேசிய வரி மற்றும் வரியல்லா வருமானங்கள் ஊடாக நிதி திரட்டலை மேற்கொள்ள அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் அது தொடர்பில் சிறந்த ஆரம்ப நிலையை அடைவதற்காக அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் செலவீனங்களை கட்டுப்படுத்த நிதியமைச்சு ஊடாக அண்மையில் இரண்டு சுற்றுநிரூபணங்கள் வெளியிடப்பட்டன.
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையேனும் செலுத்த கஷ்டமான சூழல் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டங்களாக செலுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்தீரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில் நாட்டுக்குள் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவது மிக முக்கியமானதாகும்.அதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவது பொருத்தமற்றது.'
அத்தியாவசிய சேவைகளுக்காக நிதி ஒதுக்கிக் கொள்வதில் சிரமம் காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டுமாயின் அதற்கு தேவையான மேலதிக நிதி தொகையை திரட்டிக் கொள்ளவது திறைச்சேரிக்கு பாரிய சவாலாக அமையும்.
அதனூடாக நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் வீழ்ச்சி நிலையை அடையலாம்' என அந்த சத்தியக் கடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM