முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக  இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரட்ணசிறி விக்ரமநாயக்க  2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.