காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச முயற்சிகளில் இமாலயமும் திபெத் பீடபூமியும் புறக்கணிக்கப்படுகின்றன-சர்வதேச அமைப்பு

Published By: Rajeeban

20 Jan, 2023 | 04:49 PM
image

காலநிலை தொடர்பான சர்வதேச முயற்சிகளின் போது இமாலயம் மற்றும் திபெத் பீடபூமியில் நிகழும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை  என சர்வதேச அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றங்கள் தொடர்பான முயற்சிகளின் போது இந்த தொலைதூர பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன ஐரோப்பிய ஆசிய அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

அதிகம் புறக்கணிக்கப்பட்ட இந்த பகுதிகள் குறித்து உலக தலைவர்கள் கவனம்செலுத்தவேண்டும் என இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த பிராந்தியத்தில் உலகின் சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் வாழ்கின்ற போதிலும் இந்த பகுதி குறித்து கவனம் செலுத்தப்படுவது குறைவு. 

ஆர்ட்டிக் அன்டார்ட்டிகா போன்ற பகுதிகளை போல இந்த பகுதிகள் குறித்து அதிக ஆய்வும் இடம்பெறவில்லை.

இதற்கு இப்பகுதியின் உயரம் கடுமையான தட்பவெப்பநிலைகள் மற்றும் புவிசார் பிரச்சினைகள் காரணமாகயிருக்கலாம்.

இந்த பிராந்தியம் வேகமாக வெப்பமடைந்து வருகின்றது,கிட்டத்தட்ட சர்வதேச அளவை விட இரண்டுமடங்குவேகத்தில் வெப்பமாகிவருகின்றதுஎன பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 அங்குள்ள பனிப்பாறைகள் கடந்த 50 ஆண்டுகளில் வேகமாக உருகிவிட்டன.திபெத் பீடபூமியின் 82 வீத பனிப்பாறைகளிற்கும் இதே நிலையேற்பட்டுள்ளது.

மேலும் பிராந்தியத்தின் நிரந்தர உறைபனியின் பத்துவீதமும் அற்றுபோயுள்ளது என ஐரோப்பிய ஆசிய பவுண்டேசன் தெரிவித்துள்ளது.

மோசமான காலநிலையே இதற்கான காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52