ஆஸி ஓட்ட வீரர் பீட்டர் போல் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி

By Sethu

20 Jan, 2023 | 02:07 PM
image

அவுஸ்திரேலிய ஓட்ட வீரர் பீட்டர் போல், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதையடுத்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய மெய்வல்லுநர் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

சூடானில் பிறந்த பீட்டர் போல், 800 மீற்றர் ஓட்ட வீரர். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் அவர் தவறவிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம், பீட்டர் போலிடம் ஊக்கமருந்து மாதிரி பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அச்சோதனையில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் ஒரு அப்பாவி எனத் தெரிவித்துள்ள பீட்டர் போல், ஊக்கமருந்து சோதனை பெறுபேறு குறித்து தான் அதிர்ச்சிடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

தடை செய்யப்பட்ட எந்தப் பொருளையும் தான் வாங்கவோ, பயன்படுத்தவோ இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேற்படி சோதனைப் பெறுபேற்றை உறுதிப்படுத்துவற்காக, பீட்டர் போலிடமிருந்து பெறப்பட்ட மாதிரியில் இரண்டாவது சோதனை நடத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிக் கட்டத்தில் இலங்கை ஏ ஆதிக்கம்...

2023-02-03 19:50:53
news-image

சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்டத்திற்கு டயலொக் உந்துசக்தி

2023-02-03 16:47:50
news-image

ஐ.சி.சி. சுப்பர் ஸ்டார்கள் குழுவில் இலங்கையின்...

2023-02-03 14:45:06
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை...

2023-02-03 13:32:56
news-image

மதுஷான் ஆட்டமிழக்காமல் அபார இரட்டைச் சதம்...

2023-02-03 10:41:11
news-image

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுசந்திகா மகளிர்...

2023-02-03 09:44:25
news-image

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல்...

2023-02-02 10:31:01
news-image

55 வயதில் போர்த்துகல் கழகத்தில் விளையாட...

2023-02-02 10:04:53
news-image

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்...

2023-02-02 09:44:41
news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17