(நா.தனுஜா)
இலங்கைக்கு கடந்த ஆண்டு வழங்கிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவிகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்திடம் முதலாவதாக தமது நிதியியல் உத்தரவாதத்தை அளித்ததன் மூலம் இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறைக்கு உதவியமைக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் இந்தியப்பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் மனமுவந்து நன்றி கூறுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை (18) நாட்டிற்கு வருகைதந்துள்ள நிலையில், கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் கூட்டு ஊடகசந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நான் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினேன்.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், ஏனைய தேவைகளுக்காகவும் இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியின் மூலமே இலங்கையால் மீண்டும் ஓரளவிற்கு பொருளாதார மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டை அடையமுடிந்தது.
அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை மக்களின் சார்பிலும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசாங்கத்துக்கும், உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் எமது மனமுவந்த நன்றியைத் தெரியப்படுத்துகின்றேன்.
அதேவேளை இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகள் தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு மீட்சிப்பாதையில் செல்வதற்கு எமது கடன்வழங்குனர்களிடமிருந்து உரிய காலத்தில் நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.
அந்தவகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் தமது நிதியியல் உத்தரவாதத்தை அளித்ததன் மூலம் இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறைக்கு உதவிய முதலாவது நாடாக இந்தியா திகழ்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் சமூக - பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் விசேட அவதானம் செலுத்தக்கூடியவாறான சமூக அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான இந்தியக்கடனுதவி தொடர்பான இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
அதுமாத்திரமன்றி தலதாமாளிகை பாரம்பரிய மரபுரிமைத்திட்டத்தின்கீழ் கண்டிய நடன நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு, மாதிரி வீடமைப்புத்திட்டத்தின்கீழ் அநுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு மற்றும் இந்திய வீடமைப்புத்திட்டத்தின்கீழ் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட 300 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு ஆகியவற்றில் எஸ்.ஜெய்சங்கர் நிகழ்நிலை முறைமையில் கலந்துகொண்டார்.
அதேவேளை எமது சந்திப்பின்போது எதிர்வருங்காலங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளையும், ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM