நாட்டின் புராதன மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று நாளை (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை பொது பலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று (21) மட்டக்களப்பில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களை பார்வையிட்டுள்ளோம்.

இதேவேளை நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாம் பார்வையிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் நாம் பெற்றுக்கொண்ட தரவுகளை தெளிவுபடுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.