மேற்கு வங்க மாநிலத்தில் இராணுவ வீரர்கள் ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹவ்ரா-அமிர்தசரஸ் ரயிலில் பயணித்த தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை ரயில்வே பொலிஸில் அளித்துள்ளார்.இதனையடுத்து பொலிஸார் அந்த சிறுமியை தேடியுள்ளபோது சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரிடம் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ரயில் பயணத்தின் போது ஒரு இராணுவ வீரர் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்ததாகவும் 2 பேர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் மது ஊற்றிக் கொடுத்த இராணுவ வீரரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள 2 இராணுவ வீரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளார்.