பல்கலை மாணவி கொலை: சந்தேக நபர் வழங்கும் வாக்குமூலத்தின் இரகசியத்தன்மையை பாதுகாக்குமாறு ரோஹன பண்டார கோரிக்கை 

Published By: Nanthini

20 Jan, 2023 | 04:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் எவ்வாறு வெளியாகிறது?

நீதிமன்ற நடவடிக்கை உட்படுத்தப்பட்டுள்ள இந்த விடயத்தின் இரகசியத்தன்மையை பாதுகாக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானபோது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு குதிரை பந்தயத்திடல் மைதானத்தில் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகியுள்ளன.

குறித்த சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலம் எவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது? 

மாணவி கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

விசாரணை அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் எவ்வாறு சந்தேக நபர் வழங்கும் வாக்குமூலத்தை பகிரங்கப்படுத்த முடியும்?

ஆகவே, இந்த கொலை தொடர்பான விசாரணையின் இரகசிய தன்மையை பாதுகாக்குமாறு பொலிஸ் தரப்புக்கு பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

இவ்விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53