நகைச்சுவை நடிகரும், கதையின் நாயகனுமான ஆர். ஜே. பாலாஜி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரன் பேபி ரன்' எனும் திரில்லர் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் 'ரன் பேபி ரன்'. இதில் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்க, முக்கியமான வேடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, தமிழ், ஹரிஷ் பெராடி, ஜோ மல்லூரி, நாகி நீடு, ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவன சார்பில் தயாரிப்பாளர் எஸ் லஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார். இதற்காக சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பட குழுவினர் பங்குபற்றினர்.
படத்தைப் பற்றி கதையின் நாயகனாகன் ஆர் ஜே பாலாஜி பேசுகையில்,“இதற்கு முன் நான் நடித்த எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேசம் என மூன்று படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள் தான். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்துகொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் பின் தான் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் அறிமுகமானார்.
அவர் வீட்டிற்கு வந்து சிரித்துக்கொண்டே கதை கூறினார். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம், இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.” என்றார்.
இதனிடையே இந்த திரைப்படம் அடுத்த மாதம் 5 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM