அஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சையில் அறிமுகமாகி இருக்கும் நவீன கருவி

Published By: Digital Desk 5

20 Jan, 2023 | 12:34 PM
image

இதயத்தில் உள்ள இரத்த நாளப் பகுதிகளில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு உண்டாகிறது. இந்த அடைப்பை அஞ்சியோபிளாஸ்டி எனும் சிகிச்சை  மூலம் மருத்துவர்கள் முழுமையான நிவாரணம் வழங்குவர்.

இதற்கான பரிசோதனை 2D என்ற முறையில் இதுவரை நடைபெற்றது. தற்போது Optical Coherence Tomography எனும் பெயரில் நவீன கருவி அறிமுகமாகியிருக்கிறது.

இந்த கருவிக்குள் பொருத்தப்பட்டிருக்கும் கமெரா, இதயத்தில் உள்ள இரத்தக்குழாய் பகுதிகளுக்குள் உட்செலுத்தப்பட்டு, அங்கு அடைப்பு எவ்வளவு தூரத்திற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதனையும், கொழுப்பு படிவங்கள் எவ்வகையில் படிந்திருக்கிறது என்பதையும் துல்லியமாக கண்டறியலாம்.

முப்பரிமாண கோணத்தில் இரத்தக்குழாயின் பகுதிகள் பதிவாகுவதால், இதற்கான சிகிச்சையை துல்லியமாக அளித்து நோயாளிக்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவது எளிதாகிறது மற்றும் 100 சதவீத வெற்றியை உறுதி செய்கிறது.

மேலும் இத்தகைய கருவியின் மூலம் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் இதயத்தின் இரத்தநாள பகுதியில் ஸ்டென்டுகளை துல்லியமாக பொருத்த இயலும். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் துல்லியமாக எதிர்பார்த்த அளவிற்கு விரிவடைந்து இருக்கிறதா? இல்லையா? என்பதையும் இத்தகைய கருவின் மூலம் துல்லியமாக அவதானிக்கலாம்.

மேலும் சிலருக்கு சிக்கலான முறையில் ஸ்டென்ட் பொருத்த வேண்டியதிருக்கும். இந்த சூழலில் ஓசிடி எனப்படும் இத்தகைய நவீன கருவியின் வழியாக பெறப்படும் காணொளியை மையப்படுத்தி, ஒன்றுக்குள் ஒன்று என்றளவில் ஸ்டென்டை துல்லியமாக பொருத்தி, நோயாளிக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

மேலும் சிலருக்கு இதயத்திற்கான இரத்தக்குழாய் பகுதியில் கால்சிய படிவுகள் படிந்திருந்தால், அதனை அகற்ற intravascular lithotripsy எனும் சிகிச்சையை மேற்கொள்வர். இதன் போது இரத்தக்குழாய் பகுதியில் படிந்து இருக்கும் கால்சிய படிவுகளை அகற்றுவதற்கும், அதனை முழுமையாக அகற்றபட்டதா? என்பதனை ஆராய்வதற்கும், அங்கு ஸ்டென்ட் பொருத்தப்படுவதற்கும் இத்தகைய கருவி முழுமையாக பலனளிக்கிறது.

அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில் இதன் பலன் அதிகரித்து வருவதால், நோயாளிகள் இதற்கு பேராதரவு அளித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் துல்லியமான முறையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை, வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இந்த கருவி அவசியப்படலாம்.

டொக்டர் ராஜேந்திரன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04