சுரேன் 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை தோட்டப் பகுதியில் வீதிக்கு கார்பட் இடும் பணியில் ஈடுபட்டிருந்து வாகனம்  ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஊவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சரன்ராஜ் (27வயது), மூர்த்தி (34வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். 

வனராஜா என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.