'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' ஆவணப்படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது

Published By: Digital Desk 3

20 Jan, 2023 | 10:50 AM
image

இந்தியாவில் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது. 

இந்திய பிரதமர் மோடிக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் இடையிலான பதற்றத்தை பாருங்கள் எனவும் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி பேசியபோது, 

இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஒரு சார்பான ஆவணப்படம், காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல எனவும் கடுமையாக சாடினார். இந்த ஆவணப்படங்களை இந்தியாவில் ஒளிபரப்ப முடியாது என அவர் கூறிய நிலையில், யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேருந்து நிலைய பயணிகள் மீது காரால்...

2025-03-24 16:03:22
news-image

சென்னையில்பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு...

2025-03-24 15:46:45
news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32
news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24