(என்.வீ.ஏ.)
அவுஸ்திரேலியாவின் நட்சத்திர டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவன் ஸ்மித், ஆஷஸ் தொடருக்கு முன்னர் சசெக்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
குறுகிய காலத்திற்கு அவர் தமது அணியில் விளையாடுவார் என சசெக்ஸ் கிரிக்கெட் கழகம் வியாழக்கிழமை (19) அறிவித்தது.
எஜ்பெஸ்டனில் எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் வூஸ்டர்ஷயர், லெஸ்டர்ஷயர் மற்றும் க்ளமோர்கன் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஸ்மித் விளையாடவுள்ளார்.
இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் தற்போது 2ஆம் இடத்திலுள்ள ஸ்டீவன் ஸ்மித் ஆஷ்ஸ் கிரிக்கெட் தொடருக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளவுள்ளார்.
போட்டிக்கு 60 ஓட்டங்களுக்கு மேல் என்ற சராசரியைக் கொண்டுள்ள ஸ்மித் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சசெக்ஸ் அணிக்காக விளையாடுவதன் மூலம் இங்கிலாந்தின் சுவாத்தியம், ஆடுகளங்களின் தன்மை ஆகியவற்றுக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள ஸ்டீவன் ஸ்மித்துக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
'சசெக்ஸ் கழகத்திறக்காக சில போட்டிகளில் எனக்கு விளையாட கிடைத்ததையிட்டு பூரிப்படைகிறேன். மே மாதம் நடைபெறவுள்ள அப் போட்டிகளில் வெற்றிகரமான பருவகாலத்திற்காக எனது பங்களிப்பை வழங்குவேன் என நம்புகிறேன்' என்றார் ஸ்டீவன் ஸ்மித்.
ஆஷஸ் வெற்றியை தக்க வைக்கும் முயற்சியுடன் இங்கிலாந்தை ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM