கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்தன இலங்கை - அமெரிக்க இராணுவங்கள் 

Published By: Priyatharshan

19 Jan, 2023 | 09:13 PM
image

அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து, இன்று முதல் ஜனவரி 26ஆம் திகதி வரை நடைபெறும் Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 எனும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையினை கொழும்பில் ஆரம்பித்தன.

CARAT/MAREX Sri Lanka என்பது கொழும்பு கரையோரத்திலும் திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இடங்களிலுள்ள இலங்கை கடற்படைத் தளங்களிலும் நடைபெறும் ஒரு கூட்டு, இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும்.

இப்பயிற்சியின் கடலில் நடைபெறும் பகுதியானது லட்சத்தீவுக் கடலில் நடைபெறும். 

இவ்வருட பயிற்சியானது ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றின் பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கியுள்ளதுடன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் பங்காண்மையின் 75 ஆவது ஆண்டு நிறைவுடன் ஒருங்கே நிகழ்கிறது.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் Destroyer Squadron (DESRON) 7 இன் பிரதி கொமடோர் கெப்டன் சீன் லூயிஸ் ஆகியோர் தலைமைதாங்கிய ஒரு ஆரம்ப விழாவுடன் இப்பயிற்சி ஆரம்பமானது.

“CARAT/MAREX Sri Lanka பயிற்சியானது யோசனைகள் மற்றும் உத்திகளை பரிமாறிக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது” என லூயிஸ் கூறினார்.

“நாங்கள் கடலிலும் துறைமுகத்திலும் இணைந்து செயற்படும் திறன்களை பயிற்சி செய்வதுடன் எங்களது தனிநபர்களுக்கிடையிலான உறவுகளையும் வலுப்படுத்துவோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பல்களான SLNS கஜபாஹு (P626) மற்றும் SLNS விஜயபாஹு (P 627) என்பன 13ஆவது Marine Expeditionary Unit (MEU) உடன் சான் அன்டோனியோ-வகுப்பைச் சேர்ந்த நிலம் மற்றும் நீர் இரண்டிலும் இயங்கக்கூடிய போக்குவரத்து கலத்துறை மேடையான USS Anchorage (LPD 23) இனைக் கடலில் சந்திக்கும். 

மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் மற்றும் வான் பாதுகாப்பு, சிறிய படகு நடவடிக்கைகள் மற்றும் கடலில் பயணிக்கும் போது மீள நிரப்புதல் தொடர்பான அணுகுமுறைகள் போன்ற விடயங்களில் இப்பயிற்சி கவனம் செலுத்தும். “ஒவ்வொரு நிகழ்வும் எமது படைகளுக்கிடையிலான சிறந்த ஒத்துழைப்பை மிகச்சரியாக பிரதிபலிக்கின்றன எனவும் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், அறிவு, திறன் மற்றும் இலக்குகள், கலாச்சாரங்கள் மற்றும் இலட்சியங்கள் பற்றிய புரிதல் ஆகியவற்றை ஒன்றிணைத்தல் போன்ற விடயங்களில் எமது பங்காண்மையினை வலியுறுத்துகின்றன எனவும் நான் நம்புகிறேன்” என ரத்நாயக்க கூறினார்.

கரையில் நடைபெறும் பயிற்சிகள் வகுப்பறை விடய நிபுணத்துவ பரிமாற்றங்கள் (SMEE), செய்முறைக் கல்வி மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்கினால் நடாத்தப்படும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒரு வட்டமேசை மாநாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 

இரு நாட்டு கடற்படை வாத்தியக்குழுக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள், ஒரு விளையாட்டு தினம் மற்றும் ஒரு தொடர்ச்சியான சமூக சேவை நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் சுழியோடுதல் மற்றும் நீருக்கடியிலான கட்டுமானம், மருத்துவ உதவி மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற விடயங்கள் தொடர்பான SMEEகள் என்பன இப்பயிற்சிகளின் சிறப்பம்சங்களில் அடங்கும்.

“பல்வேறு இறையாண்மை கொண்ட நாடுகள் தத்தமது அடையாளங்களைப் பேணும் அதேவேளை ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு சர்வதேச சமூகத்தைப் பாதுகாப்பதற்காக, இலங்கையும் அமெரிக்காவும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளன,” என (CTF) 76/3 படையணியின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் டெரெக் ட்ரின்க் கூறினார். “பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான எங்களது பொதுவான இலக்குகளை அடைவதை நோக்கி ஒற்றுமையுடன் பயணிப்பதற்கு CARAT/MAREX Sri Lanka எமக்கு உதவும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலதிகமாகப் பங்குபற்றும் அமெரிக்க அலுவலர்கள் மற்றும் கப்பல்களுள் U.S. 7ஆவது கப்பற்படையின் ஒரு P-8A Poseidon கப்பல் மற்றும் அதன் அதிகாரிகள், (CTF) 72, CTF 73, CTF 76/3, DESRON 7 படையணியின் கட்டளைத்தளபதி மற்றும் Amphibious Squadron 7 என்பன உள்ளடங்குகின்றன.

CARAT/MAREX Sri Lanka என்பது பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பங்காண்மைகளைப் பேணி வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் இணைந்து செயற்படும் திறன்களை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டடுள்ள இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு இருதரப்புப் பயிற்சியாகும்.

CARAT தொடரானது அதன் 28ஆவது வருடத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்புச் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவும் பங்காளர் கடற்படைகளும் இணைந்து செயற்படுவதற்கான அவற்றின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பன்னாட்டுப் பயிற்சிகளை கொண்டுள்ளது.

7ஆவது கப்பற்படை என்பது அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட இலக்கமிடப்பட்ட கப்பற்படையாகும். 

சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பாதுகாப்பதில் நட்புநாடுகள் மற்றும் பங்காளர்களுடன் அது வழமையாக தொடர்புகொண்டு செயற்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04