(என்.வீ.ஏ.)
ஆட்ட நிர்ணயங்களில் ஈடுபட்டதாக உலக தொழில்முறை பிலியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்னூக்கர் போட்டியாளர்களில் 10 சீன வீரர்கள் அடங்குகின்றனர்.
உலக ஸ்னூக்கர் டுவர் அமைப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட 10 சீன ஸ்னூக்கர் போட்டியாளர்களும் உலக தொழில்முறை பிலியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கத்தினால் நடத்தப்படவுள்ள விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.
ஸ்னூக்கர் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடைக்குள்ளான 10 வீரர்களில் உலக தரவரிசையில் முதல் 20 இடங்களில் இருக்கும் 2 வீரர்கள் அடங்குகின்றனர்.
தமது சங்கத்தினால் நடத்தப்படும் விசாரணைகளின்போது அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் நீண்ட கால தடைகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டிவரும் என உலக தொழில்சார் பிலியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்கத் தலைவர் ஜேசன் பெர்கசன் தெரிவித்தார்.
ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளினால் நீண்ட காலம் சங்கத்தில் சேவையாற்றும் தாங்கள் மனம் நொந்து போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM