இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவானஸ்ரீ ரங்காவுக்கான தடை நீடிப்பு

Published By: Vishnu

19 Jan, 2023 | 09:27 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக  தெரிவான ஸ்ரீ ரங்கா மற்றும் ஏனைய சம்மேளன உறுப்பினர்கள் அவர்களது பணியை தொடர பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நாளை (20) வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் சட்டவிரோதமானது என அதன் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழாம்  முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போதே, , மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் மேலதிக பரிசீலனையை இன்று வரை  ஒத்திவைத்ததுடன், இடைக்கால தடை உத்தர்வையும் நீடித்தது.

இந்த ரிட்  மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான  விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன  மன்றில் ஆஜரானார்.

அவர், குறித்த மனு தொடர்பில் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்து மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

மனுதாரருக்கு எதிராக முறைகேடுகள் சில தொடர்பில் விளையாட்டு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி அவருக்கு எதிராக பரிந்துரைகளை வழங்கியதாகவும், அதற்கு எதிராக மனுதாரர் மேன்முறையீடு கூட செய்யவில்லை என மேலதிக  சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இதன் போது தெரிவித்தார்.

எனவே, உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் ஒருவருக்கு  இருக்க வேண்டிய  தகுதி மனுதாரருக்கு இல்லை என சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன , அதற்கமைய சட்ட அடிப்படையற்ற மனுவை நிராகரிக்குமாறும் கோரினார்.

இதன்போது உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட  நிர்வாகிகள்  சபை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

தடை உத்தரவு நீடிக்கப்படுமானால் உதைபந்தாட்ட நிர்வாகம் சீர்குலைந்து போகும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையிலேயே குறித்த ரிட் மனு மீதான பரிசீலனைகள் நாளை ( 20 ) வரை ஒத்தி வைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல்...

2023-03-29 15:18:16
news-image

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்...

2023-03-29 14:27:18
news-image

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் -...

2023-03-29 15:20:22
news-image

DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலக்கு பாரிஸ்...

2023-03-29 12:46:08
news-image

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல்...

2023-03-29 11:35:41
news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11