(என்.வீ.ஏ.)
ஈராக்கின் பஸ்ரா சர்வதேச கால்பந்தாட்ட விளையாட்டரங்குக்கு வெளியே இடம்பெற்ற சனநெரிசலில் ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
கல்வ் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதிலிருந்து மிக நீண்ட கால தடைக்குள்ளாகி இருந்ததாலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் உலக நாடுகளிடமிருந்து நன்மதிப்பை பெறும் பொருட்டு கல்வ் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்திவந்தது. ஆனால், ஏற்பாடுகளில் நிலவிவந்த குறைபாடுகளுக்காக மன்னிப்பு கோரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஈராக்கிற்கும் ஓமானுக்கும் இடையில் ஈராக் நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இறுதிப் போட்டியைக் கண்டு களிக்கும் நோக்கத்துடன் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் டிக்கெட்களின்றி விளையாட்டரங்குக்கு வெளியே குழுமியிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட சனநெரிசலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் வைத்திய அதிகாரி ஒருவரும் உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவரும் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் பஸ்ராவில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈராக் பிரதமர் மொஹமத் ஷியா அல் சுதானியின் தலைமையில் கூடிய பிரதான அமைச்சர்களும் பஸ்ரா ஆளுநரும் கல்வ் கிண்ண இறுதிப் போட்டியை நடத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு நிதானத்துடன் செயற்பாடுமாறு இரசிகர்களை படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இறுதிப் போட்டியை நடத்தி முடித்து நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க உதவுமாறும் படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM