10 கோடி ரூபா செலுத்தக் கூடிய இயலுமை எனக்கில்லை : நாட்டு மக்களிடமிருந்தே பணத்தை சேகரிக்கவுள்ளேன் - மைத்திரி

Published By: Vishnu

19 Jan, 2023 | 09:38 PM
image

(எம்.மனோசித்ரா)

நீதிமன்ற தீர்ப்பிற்கமை 10 கோடி செலுத்தக் கூடிய பொருளாதார இயலுமை எனக்கு இல்லை. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள எனது ஆதரவாளர்களான மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து அதன் மூலம் நஷ்டஈட்டினை செலுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கோடி நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) வியாழக்கிழமை சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நான் முன்னரே அறிந்திருக்கவில்லை என்பதை ஆரம்பம் முதலே தெரிவித்து வந்தேன். எனினும் ஊடகங்களும் மக்களும் அதனை நம்பவில்லை. தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் நான் வெளிநாடு செல்ல ஆயத்தமான போது கூட, என்னுடனிருந்த பொலிஸ்மா அதிபரால் இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. இவ்விடயமும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

என்னால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளினால் இழைக்கப்பட்ட தவறுக்காக நான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன் என்பதே இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது என்னை சிறையிலடைக்க வேண்டும் எனக் கூறும் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரது காலத்தில் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

தம்மையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு என்னை சிறையிலடைக்குமாறு கூறுவதற்கு அதிகாரமில்லை. தற்போதுள்ள மற்றும் இனிவரப் போகும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் இதன் மூலம் சிறந்த படிப்பினையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நீதிமன்ற தீர்ப்பிற்கமை 10 கோடி செலுத்தக் கூடிய பொருளாதார இயலுமை எனக்கு இல்லை. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. சுமார் 30 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடுகின்ற போதிலும், எனக்கு சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிள் கூட கிடையாது. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள எனது ஆதரவாளர்களான மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து அதனையே நான் நஷ்டஈடாக செலுத்த தீர்மானித்துள்ளேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02